கோவை, ஜூலை 17: கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சமூக வலைதளங்களை ஆய்வு செய்தனர். அப்போது இந்து முன்னணி கோவை நகர செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கோயில் இடிப்பு சம்பந்தமாகவும், அரசை விமர்சிக்கும் விதமாக
சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்சேபகரமாக, ஆதாரமின்றி விமர்சனங்களை வெளியிடக்கூடாது. சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் மத ரீதியான கருத்துக்களை பதிவிடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
The post இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.