சென்னை: கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (//www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இடைநிலை ஆசிரியர் நியமனம் கூடுதலாக 1,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.