மயிலாடுதுறையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்

 

கொள்ளிடம், ஜூலை 16: மயிலாடுதுறையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வக்கீல் அம்சேந்திரன் மனு அனுப்பி உள்ளார். நாகை மாவட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நாகையில் இருந்து பிரித்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவில்லை.

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 60 கிமீ தூரமுள்ள நாகையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு செல்லக்கூடிய சூழல் உள்ளது. இதனால் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட கூடிய குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சிரமப்பட்டு வருகின்றனர். பண விரயம், நேர விரயம் ஏற்படுகிறது.

போக்சோ சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட பிரிவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை செய்து அரசிழில் அறிவிப்பு செய்து இந்த சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன். இவ்வாறு கொள்ளிடத்தை சேர்ந்த வக்கீல் அம்சேந்திரன் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: