கோவை, ஜூலை 16: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் நேற்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜரின் படத்திற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. பின்னர் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நாளில் மாணவர்களுடையே செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ‘எடுத்து வாசி’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கல்வி ஆண்டு முழுவதும் இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை அமலோற்பவ மேரி மாணவர்களுக்கு நாளிதழை கொடுத்து திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு நாளிதழை வழங்கி வருகிறார்.
The post காமராஜர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.