இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துருவை ஏற்று தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு 2ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதன்படி, தொடக்ககல்வித்துறை இணை இயக்குநர் சுகன்யா- மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராகவும்(நிர்வாகம்), பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் கோபிதாஸ்- தொடக்க கல்வித்துறை இணை இயக்குநராகவும்(நிர்வாகம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஞானகவுரி- பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மேனிலைக் கல்வி இணை இயக்குநராகவும், தொடக்க கல்வித்துறையின் கீழ் வரும் உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநர் தேவி- ஆசிரியர் தேர்வு வாரிய இணை இ யக்குநராகவும், தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் சாந்தி- தொடக்க கல்வித்துறையின் கீழ் வரும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் இணை இயக்குநராகவும்,
பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் வரும் தொழிற்கல்வி இணை இயக்குநர் ராமகிருஷ்ணன்- தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநராகவும், கள்ளர் சீரமைப்பு, மதுரை இணை இயக்குநர் ஜெயக்குமார்-பள்ளிக் கல்வி இயக்ககத்தின் தொழிற்கல்வி இணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் முனுசாமி- மதுரை கள்ளர் சீரமைப்பு இ ணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் ஆனந்தி-ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை, இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post பள்ளிக் கல்வித்துறையில் 9 இணை இயக்குநர்கள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.