விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தலைமையில் இனிப்பு வழங்கல்

 

மதுக்கரை, ஜூலை 14: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரபாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்து அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட அன்னியூர் சிவா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி நான்கு ரோடு சந்திப்பில், மதுக்கரை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட சார்பு அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தலைமையில் இனிப்பு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: