கவுகாத்தி: அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. அங்கு ஹிமந்தாவின் ஆதரவாளர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதால், கட்சிக்காக பாடுபட்ட மூத்த தலைவர்கள் மதிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இவ்வாறு அதிருப்தியில் இருக்கும் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் உட்பட பலரும் பாஜவிலிருந்து விலகி காங்கிரசில் சேர இருப்பதாக கடந்த ஒரு மாதமாக தகவல்கள் வெளியாகின்றன. இதனை பாஜ தரப்பு மறுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி பிரத்யுத் போர்டோலோய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பல பாஜ சிட்டிங் எம்எல்ஏக்கள் எங்கள் கட்சியையும், என்னையும் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்கள் காங்கிரசில் சேர விரும்புகிறார்கள். அதிருப்தி அடைந்தவர்கள், பாஜவால் ஒதுக்கப்பட்டவர்கள் காங்கிரசை நாடி வருகின்றனர். அவர்களை ஏற்பது தொடர்பாக, வரும் 15 முதல் 17 வரை நடக்கும் கட்சியின் அரசியல் விவகாரங்கள் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும். காங்கிரசில் சேர விரும்பும் சில பாஜவினர் எங்கள் கட்சியை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்? எனவே தகுதியானவர்கள் வரவேற்கப்படுவார்கள்’’ என கூறி உள்ளார்.
The post அசாம் எம்பி பரபரப்பு தகவல் பல பாஜ எம்எல்ஏக்கள் காங்.கில் சேர விருப்பம் appeared first on Dinakaran.