ஊத்தங்கரை, ஜூலை 13: ஊத்தங்கரையை அடுத்த குப்பநத்தத்தை சேர்ந்தவர் விஜயன்(50). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று காலை அதே பகுதியில் 100 நாள் திட்ட பணியில் வேலைக்கு செல்லும்போது, தனியார் தென்னந்தோப்பில் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விஜயன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விஜயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட மாற்றுத்திறனாளி பலி appeared first on Dinakaran.