×
Saravana Stores

மணல் கடத்திய 2 பேருக்கு வலை

போச்சம்பள்ளி, ஜூலை 13: மத்தூர் ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக, இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2பேர் பொக்லைன் மூலம் ஆற்றில் மணல் அள்ளி கரையில் வைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வந்ததை பார்த்தவுடன், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைனை பறிமுதல் செய்தனர்.

The post மணல் கடத்திய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Net ,Bochampalli ,Inspector ,Balamurugan ,Mathur river ,Dinakaran ,
× RELATED யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை