×
Saravana Stores

மத்திகிரி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி

ஓசூர், ஜூலை 12: ஓசூர் அடுத்த மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மாணவர்கள் பயன்பாட்டுக்காக, பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்ட திட்டமிடப்பட்டு, நேற்று பூமி பூஜை விழா நடந்தது. இதில் கோபிநாத் எம்பி., கலந்து கொண்டு, பணிகளை பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியை கவிதா, மனோகர், அமல்ராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post மத்திகிரி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Tags : Mathigiri Government School ,Hosur ,Mathigiri Government Higher Secondary School ,Bhoomi Puja ceremony ,Gopinath ,Dinakaran ,
× RELATED மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!!