×
Saravana Stores

சோமேஸ்வரருக்கு லட்சார்ச்சனை விழா

ஓசூர், ஜூலை 11: ஓசூர் ராம் நகரில் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிேஷகம் மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து கலச அபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஓசூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post சோமேஸ்வரருக்கு லட்சார்ச்சனை விழா appeared first on Dinakaran.

Tags : Lautsarchana Festival for Someswar ,Hosur ,Kornambikai Sameda Someswarar Temple ,Hosur Ram ,9TH ANNIVERSARY AND ,LUTSARCHEON FESTIVAL ,ICOIL ,Ganpati Homam ,Lakshmi Homam ,Navakraga Homam ,Rudra ,Latsarchan Festival for Someswar ,
× RELATED மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!!