தேன்கனிக்கோட்டை, ஜூலை 11: வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம்தேதி மாணவி விடுதியில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், விடுதி மேலாளர் ஷீலா செல்வராணி, இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post பள்ளி மாணவி திடீர் மாயம் appeared first on Dinakaran.