கல்விக்கு எதிரான மனநிலை பாஜவால் இளைஞர்கள் எதிர்காலம் பாழாகிறது: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதார மந்தநிலையின் பாதிப்பை இப்போது ஐஐடி போன்ற நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களும் எதிர்கொள்கின்றன. ஐஐடிக்களில் கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் 19% மாணவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு 38% ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மிக பிரபலமான கல்வி நிறுவனங்களின் நிலையே இப்படி இருக்கும்போது, மற்ற கல்வி நிறுவனங்களின் நிலை என்னவாகும்.

வேலையின்மையின் உச்சத்தை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாஜவின் கல்விக்கு எதிரான மனநிலையால் ஏற்பட்ட இந்த பாதிப்பு நாட்டின் திறமையான இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாழாக்குகிறது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண மோடி அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? இவ்வாறு ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

The post கல்விக்கு எதிரான மனநிலை பாஜவால் இளைஞர்கள் எதிர்காலம் பாழாகிறது: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: