அப்போது தலைநகர் அமராவதி வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி உள்பட ஆந்திர புனரமைப்பு திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். இந்த கோரிக்கையால் பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் இது பற்றிய எவ்வித அறிவிப்பையும் ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆனால், ஆந்திர முதல்வரோ தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிப்பதால் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
இதனால் 2024-2025 ஆண்டிற்கான ஆந்திராவின் முழு பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், அதனை செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சிறப்பு நிதி கோரிக்கை வைத்துள்ளதாக கூற்றப்படும் நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் இம்முறை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டாக இருக்குமா அல்லது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரின் பட்ஜெட்டாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
The post ஒன்றிய பட்ஜெட்டில் சந்திரபாபு நாயுடு கோரிய நிதி கிடைக்குமா?.. மாநில பட்ஜெட்டை ஒரு மாதம் தள்ளி வைத்த ஆந்திர அரசு..!! appeared first on Dinakaran.