பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி முன்பு வேகத்தடை அமைப்பு

காங்கயம், ஜூலை 10: சிவன்மலை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நேற்று சிவன்மலை அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள், சிவன்மலை தேர் திருவிழா போன்ற நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சிவன்மலை முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

மேலும் தினசரி இந்த வழியாக லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சிவன்மலை பகுதியில் உள்ள அரசு பள்ளி முன்பு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அப்பகுதியினர் பள்ளி வளாகம் முன்பு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலை துறை மூலம் சிவன்மலை பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் சிவன்மலை பகுதி மக்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி முன்பு வேகத்தடை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: