அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் செயல் அலுவலர் எச்சரிக்கை போளூர் பேரூராட்சி பகுதியில்

போளூர், ஜூலை 10: போளூர் பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கரன்பாண்டியன் அறிவுரையின்படி போளூர் பேரூராட்சியில் வியாபாரிகள், அனைத்து அரசியல் பிரமுகர்கள், மன்ற உறுப்பினர்கள் உட்பட ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் ச.ராணிசண்முகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ந.சாந்திநடராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் யூ.முகம்மத்ரிஸ்வான் வரவேற்று பேசியதாவது: போளூர் பேரூராட்சி பகுதியில் விளம்பர பேனர் வைக்க பேருராட்சி அலுவலகத்தில் 15 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். பேனர் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளரகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். காவல் நிலையத்தின் தடையில்லா சான்று அனுமதி பெற வேண்டும்.

அனுமதி காலம் முடிந்தவுடன் பொதுமக்களின் பாதிக்காத வண்ணம் பேனர்களை அகற்ற வேண்டும். சாலைகளின் மூலைகள், தெருக்களின் கூடுமிடம், போக்குவரத்து போன்ற இடங்களில் 50 மீட்டர் தொலைவிற்குள் வைக்க வேண்டும். 3 மீட்டர் அகலத்திற்குள் நடைபாதை உள்ள சாைலைகளில் பேனர் வைக்க அனுமதி இல்லை. சாலையில் வைக்கப்படும் பேனர்கள் ஒன்றுக்கு 10 மீட்டர் இடைவெளி அவசியம் விட வேண்டும். அனுமதி காலத்திற்கு மேல் பேனர்கள் வைத்திருப்பின் பறிமுதல் செய்யப்படும். தேவையற்ற வாசகங்கள் தவிர வேறு வாசகங்கள் போடக்கூடாது. பேரூராட்சி, காவல்துறை அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும், அபராத தொகை விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், மன்ற உறுப்பினர்கள் கலந்து ெகாண்டனர்.

The post அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் செயல் அலுவலர் எச்சரிக்கை போளூர் பேரூராட்சி பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: