ஊத்தங்கரை, ஜூலை 10: ஊத்தங்கரை ஒன்றியம், பாவக்கல் ஊராட்சி அனுமன்தீர்த்தம் முதல், சிங்காரப்பேட்டை வரை செல்லும் பிரதான சாலையில், ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், 7 இடங்களில் தளம் பெயர்ந்து போனது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பழுதடைந்த சாலையை சீரமைக்க ஒன்றிய பொது நிதி ₹3,65 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். சாலை பணிகள் தொடங்கப்பட்டு, ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
The post பழுதடைந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.