இவ்வழக்கு தொடர்பாக சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர் அர்பாஸ் கான் ஆகியோரின் வாக்குமூலத்தை கடந்த ஜூன் 4ம் தேதி போலீசார் பதிவு செய்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சல்மான் கானின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், தேடப்படும் 3 குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1,735 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 46 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 22 தொழில்நுட்ப ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
The post சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு; 1,735 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தகவல் appeared first on Dinakaran.