நங்கவரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள்

குளித்தலை, ஜூலை 9: நங்கவரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாரம் நங்கவரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி ஆய்வு செய்தார். ஆய்வின்போது விவசாயிகளுக்கு தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், பசுந்தாள் உர விதைகள், வம்பன்-8, வம்பன்-10 உளுந்து, எள் வி .ஆர். ஐ 3, விதைகள், அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பாஸ், பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), உயிர் உரங்கள், உயிர் பூசண கொல்லிகள், நுண்ணூட்ட சத்துக்கள், ஆர்கானிக் உரங்கள், வேளாண் கருவிகள், விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் வழங்கினார்.இந்நிகழ்வில் துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தனபால், அருள்குமார், இளநிலை உதவியாளர் (பிணையம்) தங்கராஜ் மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

The post நங்கவரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் appeared first on Dinakaran.

Related Stories: