குளித்தலையில் மது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

 

குளித்தலை, செப்.28: குளித்தலை நகர பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி மது, போதைப்பொருள் ஒழி்ப்பு மாநாட்டை உளுந்தூர்பேட்டையில் நடத்துகிறது. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அதன்படி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுவதையொட்டி கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெண்களிடையே துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சி குளித்தலை பஸ் நிலையம், சுங்க கேட் பெரிய பாலம் உள்ளிட்ட பல இடங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தை கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றல் அரசு தலைமையில், மண்டல துணை செயலாளர் பெரியசாமி , மாவட்டத் துணை அமைப்பாளர் ரங்கசாமி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புதுப்பட்டி செந்தில், நச்சலூர் கார்த்திக் ராஜாங்கம் சங்கர், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து துண்டறிக்கை வழங்கினர்.

The post குளித்தலையில் மது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் appeared first on Dinakaran.

Related Stories: