அன்புக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுவன்

 

கரூர், அக். 5: அன்புக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் குறித்து தகவல் தெரிந்தால் உதவலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள கரூர் அன்புக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் கடந்த 30 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ள அரவிந்த்(10) என்ற சிறுவன் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

இவரது அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் குறித்தும், இவரின் முகவரி குறித்தும் தெரியாதால் இந்த சிறுவனின் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் இருப்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலக வாட்ஸ் அப் எண்ணில் 8903331098 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அன்புக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் appeared first on Dinakaran.

Related Stories: