×
Saravana Stores

சூதாடிய 5 பேர் கைது 8 டூவீலர்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூலை 9: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல்நிலைய எஸ்ஐ மோகனசுந்தரம் மற்றும் போலீசார், கும்ளாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள கோயில் அருகே மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. அவர்களில் 5 பேர் போலீசில் சிக்கினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(33), கிருஷ்ணமூர்த்தி(33), அருண்(28), இந்திரபிரசாத்(29), சுனில்(30) என்பது தெரிந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் 8 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post சூதாடிய 5 பேர் கைது 8 டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri District ,Thali Police Station SI Mohanasundaram ,Kumlapuram ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...