காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பூத்தட்டு ஊர்வலம்

 

சிவகங்கை, ஜூலை 9: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 70ம் ஆண்டு பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் இக்கோயிலில் ஆனி மாதம் 8 நாட்களுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்நிலையில் பூச்சொரிதல் விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் நாளான நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூத்தட்டுகளையும், மலர் மாலை எலுமிச்சை மாலை கொண்டு வந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேலும் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காளியம்மன் காட்சியளித்தார். தினமும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெற்றது.  பறை இசை முழங்க ஏராளமான மாணவர்கள் சிலம்பம் சுற்றி வானவேடிக்கையுடன் அரண்மனை வாசலில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதையொட்டி தினமும் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் என பல வகையான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை 12ம் தேதி பூச்சொரிதல் விழாவும், சந்தன காப்பு அலங்காரத்தில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

 

The post காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பூத்தட்டு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: