தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் கலசபாக்கம் அருகே கோயில் திருவிழா

கலசபாக்கம், ஜூலை 8: கலசபாக்கம் அருகே அகோர வீரபத்ர சுவாமி கோயில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் அகோர வீரபத்ர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 47ம் ஆண்டு உற்சவத்தையொட்டி நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி பொன்னியம்மன் குளக்கரையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர். மேலும், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, ஏராளமானோர் சாமி வந்து ஆடினர். விழாவில் திரளான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், நேற்று இரவு கரகாட்டம், ஒயிலாட்டம், வானவேடிக்கையுடன் உற்சவமூர்த்தி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

The post தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் கலசபாக்கம் அருகே கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: