சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

சிவகாசி, ஜூலை 7: கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையில் நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரை பகுதியில் நடைமேடை அமைக்க கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரை பகுதியில் 1425 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலத்தில் நடைமேடை அமைக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு அழகான நடைமேடை அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

மேலும், நடைமேடையை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் கண்மாய் உள்ளே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் நடை மேடை பகுதியில் மரக்கன்றுகள், அமரும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை 30 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பெரியகுளம் கண்மாய் கரையில் நடைமேடை அமைக்கும் பணிகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: