நாகர்கோவிலில் பைக் ரேஸ் சென்ற 7 பேர் சிக்கினர்

நாகர்கோவில், ஜூலை 6 : குமரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதி மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகில் பைக்கில் ரேஸ் டிரைவிங் செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் . அந்த வகையில் நேற்று டிராபிக் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், எஸ்.ஐ. சுமித் மற்றும் போலீசார் நாகர்கோவிலில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். நேற்று மாலை கணேசபுரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது அந்த வழியாக சென்ற மாணவிகளிடம் பந்தா காட்டும் வகையில் பைக்கில் வாலிபர்கள் சிலர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மொத்தம் 7 பேர் சிக்கினர். இவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்கள் வைத்திருந்த பைக்குகள் அனைத்தும் விலை உயர்ந்த பைக்குகள் ஆகும். முறையான நம்பர் பிளேட் இல்லை. ஒரு சிலருக்கு லைசென்ஸ் இல்லை. இதையடுத்து பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் ஒவ்வொரு பைக்கிற்கும் அதிக பட்சமாக ரூ.8500 வரை அபராதம் விதித்தனர். இவர்களின் செல்போனை பார்த்த போது பள்ளிகள் அருகில் மாணவிகளை கவருவதற்கான ரேஸ் டிரைவிங் செய்து, வீடியோ பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

The post நாகர்கோவிலில் பைக் ரேஸ் சென்ற 7 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: