பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

பரமக்குடி, ஜூலை 5: பரமக்குடி அரசு கலை கல்லூரியில் 2024-25ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கடந்த மே மாதம் 24ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டு கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் சேர்க்கை நடந்தது. முதல் நாளில் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு கல்லூரி சார்பாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், மாணவர்களுக்கு நடைபெற்ற கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பாடப்பிரிவுகளைச் சேர்ந்த துறை தலைவர்கள் பாடப்பிரிவுகளில் உள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள்,மேற்படிப்புகள், ஒழுக்கம், நூலகம் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கல்வி ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களை அழைத்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் அறிவழகன் கோவிந்தன், கண்ணன், ரேணுகாதேவி, விஜயகுமார், தினேஷ் பாபு, மும்தாஜ் பேகம், மோகன கிருஷ்ணவேணி உள்ளிட்ட துணைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: