எம்பிக்கள் இருக்கையில் உள்ள மைக் ஆப் செய்யும் சுவிட்ச் என்னிடமில்லை: மக்களவை சபாநாயகர் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் கடந்த வாரம், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் முறைகேடு விவகாரத்தை எழுப்ப முயன்ற போது, தனது மைக் அணைக்கப்பட்டதாக கூறினார். இது குறித்து சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று அளித்த பதிலில், ‘‘சபாநாயகர் இருக்கையில் இருப்பவர்கள் உத்தரவுகளை மட்டுமே வழங்குகின்றனர். யாருடைய பெயர் அழைக்கப்படுகிறதோ அந்த உறுப்பினர் சபையில் பேசலாம். சபாநாயகர் உத்தரவுக்கு ஏற்ப அதிகாரிகள் மைக்கை கட்டுப்படுத்துகின்றனர். எனவே, எம்பிக்களின் மைக்கை அணைக்கும் எந்த சுவிட்ச்சும் என்னிடம் இல்லை. அதற்கான ரிமோட் கன்ட்ரோலும் இல்லை. இது சபாநாயகரின் கண்ணியம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் முன்பிருந்த அதே அமைப்பு தான் இப்போதும் இருக்கிறது’’ என்றார்.

The post எம்பிக்கள் இருக்கையில் உள்ள மைக் ஆப் செய்யும் சுவிட்ச் என்னிடமில்லை: மக்களவை சபாநாயகர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: