புதிய 3 சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை புதுச்சேரி உள்பட பல மாநில வக்கீல்கள் எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், புதுச்சேரியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அரசு சார்பில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அரங்கில் இன்று நடந்தது. சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு, சட்டத்துறை தயாரித்துள்ள 3 புதிய சட்டங்கள் குறித்த கையேடை வெளியிட்டு பேசியதாவது: பெரிய வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் 3 புதிய சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை தமிழில் மொழியாக்கம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் அனைத்தும் குற்றம் செய்பவர்களுக்கும் தெரிய வேண்டும். சட்டங்களை கடுமையாக்கும் போதுதான் குற்றங்கள் குறையும் என்றார்.

 

The post புதிய 3 சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: