விசோகோ: போஸ்னியாவில் கையில்லாத சிறுமி ஒருவர் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பதக்கங்கைளை குவித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 13 வயதான சாரா பிறக்கும் போதே இடது கை குறைபாட்டுடன் பிறந்தவர். இருப்பினும் சிறுவயது முதலே ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட அவர், ஒரு கை இல்லாமல் போனாலும் நம்பிக்கையுடன் பயிற்சிகளை மேற்கொண்டார். கடின உழைப்பு தற்போது சாராவை போஸ்னியாவின் இளம் ஜிம்னாஸ்டிக் நட்சத்திரமாக மாற்றியுள்ளது. சமவயது மாணவிகளின் பரிகாசங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், கடந்து சாதனைகளை சாத்தியமாக்கி இருப்பதாக சாரா தெரிவித்துள்ளார். திறமைக்கு உடல் குறைபாடு தடையல்ல என்பதை ஒவ்வொரு ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும் நிருபித்து வருகிறார் சாதனை சிறுமி சாரா. …
The post கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத போஸ்னியா சிறுமி: ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தல்…குவியும் பாராட்டுக்கள் appeared first on Dinakaran.