கேரளாவில் புதிய அமைச்சர் பதவியேற்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய அமைச்சராக ஓ.ஆர். கேளு நேற்று பதவியேற்றார். அவருக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கேரள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவசம் போர்டு அமைச்சராக இருந்த கே. ராதாகிருஷ்ணன் கடந்த மக்களவைத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தன்னுடைய அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக மானந்தவாடி தொகுதி சிபிஎம் எம்எல்ஏவான ஓ.ஆர். கேளுவுக்கு அமைச்சர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஓ.ஆர்.கேளு புதிய அமைச்சராக பதவி ஏற்றார். நேற்று மாலை கேரள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் வகித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மட்டும் கேளுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் புதிய அமைச்சர் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: