கள்ளக்குறிச்சி விஷசாராய பலி குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக சார்பில் மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 2021ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக விஷசாராய மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. 2021ம் ஆண்டிலிருந்து கள்ளச்சாராய விற்பனை கடுமையாக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சி விஷசாராய பலி குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக சார்பில் மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: