தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போது ஆந்திர உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜ இளங்கோ, வழக்கறிஞர் வி.கண்ணதாசன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எஸ்.மணிக்குமார் சென்னை உயர் நீதிமன்றதிதில் 2006 முதல் 2019வரை நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் அவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2019 அக்டோபர் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். இவரது தந்தை விழுப்புரம் மாவட்டம் பாலிகிராமத்தைச் சேர்ந்த கே.சாமிதுரை. 1990 முதல் 1994 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தவர். மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

The post தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: