நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ பகிர்வு பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்க பாஜ வலியுறுத்தல்

புதுடெல்லி: நீட் தேர்வின்போது வழங்கப்பட்ட விடைத்தாள் கிழிந்துவிட்டதாக கூறி தேசிய தேர்வு முகமைக்கு எதிராக ஆயுஷி பட்டேல் என்ற மாணவி புகார் எழுப்பினார். கிழிந்த ஓஎம்ஆர் தாளுடன், நீட் தேர்வு முடிவை அறிவிப்பதில் முறைகேடுகள் நடந்ததாக மாணவி கூறிய வீடியோவை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாணவி ஆயுஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவி சமர்ப்பித்தது போலி விடைத்தாள் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்து போலி புகார் கொடுத்த மாணவியின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்காக பிரியங்காகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவால்லா வலியுறுத்தி உள்ளார்.

The post நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ பகிர்வு பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்க பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: