கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ள நிலையில் அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை..!!

கர்நாடகா: கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ள நிலையில் அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரேணுகா சுவாமி என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் தர்ஷன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா குறித்து கருத்து தெரிவித்ததால் ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளதால் தற்கொலை செய்துகொண்டதாக தர்ஷன் மேலாளர் ஸ்ரீதர் வீடியோ பதிவிட்டுள்ளார்.

தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளைஞர் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெறும் நிலையில் மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். தர்ஷனிடம் மேலாளராக இருந்த மல்லிகார்ஜுனா என்பவர் 8 ஆண்டுகளாக காணாமல்போன தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் தர்ஷனின் பணத்தை முறைகேடு செய்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து நஷ்டமடைந்த நிலையில் 8 ஆண்டுகளாக மாயமானார். ரேணுகா சாமி கொலையை விசாரித்து வரும் போலீசாரே, தர்ஷன் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலையை விசாரிக்கின்றனர்.

 

The post கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ள நிலையில் அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: