கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாணாங்குளத்தில் மின்னொளி கபடி போட்டி

நெல்லை, ஜூன் 19: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாங்குளம் கிராமத்தில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக ஏற்பாட்டில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைகண்ணு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கும் விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைகண்ணு தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். விழாவில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் வாசுதேவன், நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் புஷ்பபாண்டி,ஆழ்வாநேரி ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளருமான சீனிதாஸ், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் ஈஸ்வரன், பரமசிவம் மற்றும் ஊர் பொதுமக்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாணாங்குளத்தில் மின்னொளி கபடி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: