வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பளு தூக்கும் போட்டியில் சாதனை

 

வலங்கைமான், ஜூன் 14: வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர் இலையரசு, மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு கணினியியல் பயிலும் மாணவர் இலையரசு மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

பஞ்சாபில் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றதையடுத்து, அவருக்கு உரிய பதக்கம் மற்றும் பாராட்டு வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை வகித்தார், குடந்தை ஜோஸ் ஆலுக்காஸ் பொறுப்பாளர் இரஞ்சித் மாணவருக்குப் பதக்கம் அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் முதல்வரின் நேர்முக உதவியாளர் இரா.வேல்முருகன், கணினித்துறைத் தலைவர் லதா, உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞானராஜ், விரிவுரையாளர் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு மாணவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

The post வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பளு தூக்கும் போட்டியில் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: