பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: நன்னிலம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

திருவாரூர், ஜூன் 14: திருவாரூர் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நன்னிலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா திருப்பாம்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார் (40). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2017ம் ஆண்டு அதே ஊரில் வசித்து வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மானபங்கப்படுத்தி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் மேற்படி ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நன்னிலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில் முடிவில், ராஜகுமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மூலம் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: நன்னிலம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: