பள்ளி மாணவன் கல்லால் தாக்கி கொடூர கொலை

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, 17 வயது சிறுவன், கல்லால் தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, பென்னாகரம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன் ேபரில், போலீசார்சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் சடலமாக கிடந்தது பென்னாகரம் அருகே பண்டஅள்ளி ஊராட்சி திப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாளின் மூத்த மகன் யாதவன் (17) என்பது தெரியவந்தது.

தற்போது பிளஸ்2 செல்ல இருந்தான். கடந்த 5நாட்களுக்கு முன், பெருமாள் அவரது மனைவி குமுதா ஆகியோருக்கு இடையே, குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவனிடம் கோபித்துக் கொண்டு, குமுதா தாசம்பட்டியில் உள்ள தாய் வழி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பாட்டி வீட்டில் இருந்த யாதவன், திப்பட்டிக்கு சென்று தந்தையை சந்தித்து விட்டு வருவதாக, நேற்று முன்தினம் மாலை கூறி சென்றுள்ளான். அதன் பின்னர், நேற்று காலை தாசம்பட்டி அரசு பள்ளி அருகே இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை.

The post பள்ளி மாணவன் கல்லால் தாக்கி கொடூர கொலை appeared first on Dinakaran.

Related Stories: