கொள்ளிடம் அருகே சேத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி

 

கொள்ளிடம், ஜூன் 12: கொள்ளிடம் அருகே சேத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ், ஆசிரியர்கள் சந்திரன், கணேசன், ராஜேஷ்குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பவள்ளி குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வளாகம் வகுப்பறைகள் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தனர்.

The post கொள்ளிடம் அருகே சேத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி appeared first on Dinakaran.

Related Stories: