திருக்கோவிலூர், ஜூன் 12: திருக்கோவிலூரில் தெரு நாய் கடித்து 14 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் தெரு, மருத்துவமனை சாலை, பேருந்து நிலையம் அருகே உள்ள அரிசி கடை, நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 20வதுக்கும் மேற்பட்டோரை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது.
இதையடுத்து நாய் கடித்து காயமடைந்த விளந்தை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் (72), ஆளூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (27), விஜயா (48), முடியனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (53), பனப்பாடி கிராமத்தை சேர்ந்த அஞ்சாமணி (63), திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த வள்ளி (32), மேல்வாலை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (53), ஜம்பை கிராமத்தை சேர்ந்த மாயவன் (62), வடமருதூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி (17), சைலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (24), கூடலூர் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி (15), நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி (36), எல்லை கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி (72), திருக்கோவிலூரை சேர்ந்த தனுஷ்நாதன் (15) உள்ளிட்ட 14 பேர் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் கீதா உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தெரு நாயை விரட்டிச் சென்று பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டுள்ளனர். நாய் கடித்து 14 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருக்கோவிலூாில் பரபரப்பு தெரு நாய் கடித்து 14 பேர் படுகாயம் appeared first on Dinakaran.