விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு

 

தேவகோட்டை, ஜூன் 11: தேவகோட்டை அருகே தாணிச்சா ஊரணியைச் சேர்ந்த சரவணன் மகன் ஹரிபாண்டி(21). இவர் நேற்று முன்தினம் தேவகோட்டையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு எழுதினார். இவரது தந்தை காரைக்குடி டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். தேர்வு முடிந்து தந்தையை பார்க்க டூவீலரில் சென்றார்.

சடையன்காடு என்ற இடத்தில் செல்லும்போது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் புதுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் என்பது தெரியவந்தது. காரினை பறிமுதல் செய்து டிரைவர் சௌந்தர்(35) கைது செய்யப்பட்டார்.

The post விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: