சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் தற்கொலை முயற்சி

விருத்தாசலம், ஜூன் 11: விருத்தாசலம் காந்திநகர் வஉசி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(70). இவர் 16 வயது சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு டிவி பார்ப்பதற்கு வரச் சொல்லி அவரிடம் தவறாக நடந்துள்ளார். சிறுமி தடுத்தும் கட்டாயப்படுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் அழைத்தபோது சிறுமி வர மறுத்ததற்கு அவரை மிரட்டி பலமுறை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த அவரது தாய், அவரை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், கொளஞ்சிநாதன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் போலீசார் தன்னை தேடி வருவது குறித்து அறிந்த கொளஞ்சிநாதன் பயந்து விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: