கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பெணுகொண்டாபுரம்- 16.2, போச்சம்பள்ளி- 8.5, கேஆர்பி டேம்- 6.6 என மொத்தம் 31.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் 483 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 383 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 41.16 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 111 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 45.15 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி appeared first on Dinakaran.

Related Stories: