பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

உளுந்தூர்பேட்டை, ஜூன் 10: உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.இந்த நிலையில் கோயில் விழாவுக்கு வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வடகராம்பூண்டியைச் சேர்ந்த சுமதி என்ற பெண் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.ஒன்றரை லட்சம் இருக்கும். இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சுமதி தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: