முயல்களை வேட்டையாடிய 2 பேர் அதிரடி கைது

வானூர், ஜூன் 9: புதுச்சேரி அருகே தமிழக எல்லை பகுதியான விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி அருகே 2 பேர் துப்பாக்கிகளுடன் முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் திண்டிவனம் வன சரக அலுவலர் புவனேஷ் தலைமையில் வனவர் கோகுல லட்சுமி, வனக்காப்பாளர் பிரபு மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், மொரட்டாண்டி காட்டுப்பகுதியில் முயல்களை வேட்டையாடி அதை விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுச்சேரியை சேர்ந்த பார்த்திபன்(30), மணிமாறன்(30) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனம், நாட்டு துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post முயல்களை வேட்டையாடிய 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: