பொருட்கள் வாங்கி கொண்டு வந்த தாய் விபத்தில் பரிதாப பலி

சிதம்பரம், ஜூன் 8: சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி வள்ளி (46). நேற்று காலை மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்க வள்ளி, அவரது உறவினர் டி.நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) என்பவருடன் பைக்கில் சென்றார். சிதம்பரம் வந்து பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சிதம்பரத்தில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிவாயம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆடுகள் சாலையை கடந்தன. இதில் பைக்கை ஓட்டி வந்த ஆகாஷ் ஆட்டின் மீது மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி வள்ளி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பொருட்கள் வாங்கி கொண்டு வந்த தாய் விபத்தில் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: