ரேசன் கடை மண்ணெண்ணெயை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு: குமரி ஆட்சியர் பதில் தர ஆணை

கன்னியாகுமரி: ரேசன் கடை மண்ணெண்ணெயை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஒவ்வொரு மாதமும் ரேசன் கடைகளுக்கான மண்ணெண்ணெய் ஒப்பந்த வாகனங்கள் மூலம் கொண்டுவந்து விநியோகிக்கப்படும். மண்ணெண்ணெயை நேரடியாக கொள்முதல் செய்ய கடை விற்பனையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களை தவிர்த்து, உரிய உரிமம் இல்லாத வாகனங்களில் மண்ணெண்ணெயை எடுத்து வருவது பாதுகாப்பானது அல்ல. ரேசன் கடைக்காரர்களே மண்ணெண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர் வாகனங்களில் மண்ணெண்ணெயை கொண்டு வந்து விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வழக்கு பற்றி குமரி ஆட்சியர், குடிமைப் பொருள் விநியோக அதிகாரி பதில் தர உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தது.

 

The post ரேசன் கடை மண்ணெண்ணெயை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மனு: குமரி ஆட்சியர் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Related Stories: