×

சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை விரத வழிபாடு மட்டும் ஏன் சிறந்தது தெரியுமா..?

சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதற்கெல்லாம் காரணம்… பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர். அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும். பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை விரத வழிபாடு மட்டும் ஏன் சிறந்தது தெரியுமா..? appeared first on Dinakaran.

Tags : Saibaba ,Sai Baba ,
× RELATED கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு