ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவிற்கு ‘உங்கள் கடின உழைப்பு உங்கள் அரசியல் வாழ்க்கையில் உயர்ந்த மைல்கற்களைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன்’ என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “ஆந்திரப் பிரதேசத்தில் 18வது மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியையும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும் பெற்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன்.

நீங்கள் வெற்றிகரமான பதவிக் காலம் வர வாழ்த்துகிறேன். மேலும் உங்கள் கடின உழைப்பு உங்கள் அரசியல் வாழ்க்கையில் உயர்ந்த மைல்கற்களைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

The post ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: